பல தொழிலாளர்களைச் சவூதிக்கு அனுப்பும் நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகளை மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) தலைவரும், ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான குழுவின் தலைவருமான டாக்டர். ஹாலா அல்-துவைஜ்ரி சந்தித்தார்.
ரியாத்தில் உள்ள HRC தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 14 தூதரகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மனித உரிமைகள் பாதுகாப்பில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான முயற்சிகள்குறித்து விவாதித்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தூதரகப் பணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், மனித கடத்தல் குற்றங்கள்பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அறிக்கையிடல் வழிமுறைகளை மேம்படுத்தவும், டாக்டர் அல்-துவைஜ்ரி வலியுறுத்தினார்.
மனித கடத்தல் குற்றங்களின் சிறப்பியல்புகள், குற்றவாளிகளைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சவூதிகள் பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் டாக்டர் அல்-துவைஜ்ரி விளக்கினார்.





