ஜெத்தா மாநகரில் ஷரஃபியாவில் உள்ள லக்கி தர்பார் ஆடிட்டோரியத்தில் அக்டோபர் 26 வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இந்தியன் வெல்ஃபேர் ஃபோரத்தின் ஜெத்தா நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்…
மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மனப்பாறை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான பி.அப்துல் சமது எம்.எல் ஏ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்
நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை சலீமுல்லா கான், மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முஹம்மது மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் அமீன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியன் வெல்ஃபேர் ஃபோரத்தின் நிர்வாகிகள் இர்பான், அப்துல் மஜீது, நாசர், அப்துல் சமது, பொறியாளர் ஹலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





