UNHRC கொண்டு வந்துள்ள “மத வெறுப்பு, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டுவது சம்பந்தமான தீர்மானத்தைச் சவூதி அரேபியா வரவேற்றுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் வலுவான கோரிக்கைக்குப் பிறகு வந்த வரைவுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது உலகெங்கிலும் வெறுப்பு பிரச்சாரம் நீங்கிச் சமாதானம் நிலவுவதற்கான ஒர் உலகளாவிய சட்ட நடிவடிக்கையாகும்.
வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தை பரப்ப முயலும் அனைத்து அழிவுச் செயல்களையும் நிராகரித்து, சகிப்புத்தன்மை மற்றும் நிதானத்திற்கு ஆதரவாக அதன் அனைத்து முயற்சிகளையும் தொடரும் என்றும் சவூதி அரேபியா கூறியது.