சவூதி அரேபியாவில் கோடை காலம் உச்சத்தை அடைந்து வரும் வேளையில், தேசிய வானிலை மையம் அறிவித்து இருந்தது போல வியாழக்கிழமை மாலை மதினா நகரில் படபடவென பலத்த மழை கொட்டியது.
பகலில் வெயில் 40 டிகிருக்கும் மேல் அடித்து சுட்டெரித்து மக்களை வெளியில் தலைகாட்ட விடாமல் செய்த நிலையில் மாலை தொழுகைக்கு சென்றிருந்த மக்கள் புனித மசூதியை விட்டு வெளியே வரும் வேளையில் வானம் கருத்து பலத்த இடிகளுடன் மழை கொட்டியது.
திடீர் மழையினைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்து தங்கள் அலைபேசிகளில் கணோளியாக படம் பிடித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த மழை படிப்படியாக குறைந்து நின்றது. கோடையில் பெய்த திடீர் மழையால் மதினா நகரம் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டது.