தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் (சிஎஸ்டி)கடந்த திங்களன்று மக்கா மற்றும் புனிதத் தலங்களில் தரவு நுகர்வு 4,601 டெராபைட்கள் அல்லது 1.89 மில்லியன் மணிநேர 1080p வீடியோக்களுக்குச் சமமானதாகத் தெரிவித்தது.
அதன் சமீபத்திய புள்ளிவிவரங்களில், சராசரி தனிநபர் இணையத் தரவுப் பயன்பாடு தினசரி 785MB ஐ எட்டியுள்ளது, இது ஒரு நபருக்குச் சர்வதேச சராசரி தரவுப் பயன்பாட்டைவிடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
மொபைல் இன்டர்நெட் டவுன்லோட் மற்றும் அப்லோடுக்கான சராசரி வேகம் முறையே வினாடிக்கு 197.5MB மற்றும் வினாடிக்கு 27.5MB என்ற அளவை எட்டியுள்ளது என்று ஆணையம் கூறியது, இது பயணிகளின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களது குடும்பத்தினருடன் அவர்களின் தொடர்புகளை எளிதாக்குவதற்கும் சவூதியின் உள்கட்டமைப்பின் திறனை நிரூபிக்கிறது.
பயணிகள் அதிகம் பார்வையிடும் இணையதளங்கள் யூடியூப், டிக்டோக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் ஃபேஸ்புக் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்தாம் தலைமுறை (5ஜி) கோபுரங்களின் எண்ணிக்கையை 1,205 சதவீதம் அதிகரித்து மக்கா, மதீனா 2,900 க்கும் மேற்பட்ட கோபுரங்களும், மேலும் 74 சதவீதம் அதிகரித்து 6,000க்கும் மேற்பட்ட தகவல் தொடர்பு கோபுரங்களையும், புனித தலங்களில் 10,500 க்கும் மேற்பட்ட WI-FI அணுகல் புள்ளிகளை வழங்குவதோடு இது 118 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குப் பயணிகளின் எண்ணிக்கை திரும்புவதைச் சமாளிக்க இந்த ஆண்டு ஹஜ்ஜிற்கான உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன என்று ஆணையம் கூறியது.