சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்ததையடுத்து, புதன்கிழமையன்று பள்ளிகளை மூடுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது, குறிப்பாக மக்காவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரே இரவில் கடும் இடியுடன் கூடிய புயலிலிருந்து யாத்ரீகர்கள் தஞ்சம் அடைவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
“செவ்வாய்கிழமை மாலை, மக்கா அல் முகர்ரமாவின் சுற்றுப்புறங்களின் தனித்தனி பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது” என்று சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறும் போது “மிதமான மற்றும் பலத்த இடி மற்றும் தூசி காற்றுடன் கூடிய மழை மக்கா, அசிர் மற்றும் ஜிசான் பகுதிகளில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.