சவூதி அல்லாத வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அப்ஷர் தளம் மூலம் மக்காவிற்குள் நுழைய அனுமதி கோருவதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபியாவில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான பொது இயக்குநரகம் (ஜவாசாத்) அறிவித்துள்ளது.
சவூதி ஜவாசாத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மூலம்,மக்காவிற்குள் நுழைய அனுமதி கோருவதற்கான நடைமுறைகளை கூறியுள்ளது.
முதலில் அப்ஷர் தனிநபர்களில் உள்நுழைந்து,அலைபேசியில் வரக்கூடிய OTP ஐச் சரிபார்க்கவும்.பின் “மின்னணு சேவைகள்” என்பதைக் கிளிக் செய்து, “குடும்ப உறுப்பினர் சேவைகள்” மக்காவிற்கு நுழைவு அனுமதியைக் கிளிக் செய்து அனுமதி விண்ணப்பத்தை உருவாக்கவும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், செயலாக்கப்படுவதை விண்ணப்பதாரருக்கு அப்ஷர் தளத்தில் அவரது கணக்கு மூலம் தெரிவிக்கப்படும். இந்த சேவை ஹஜ் பருவத்தில் மட்டுமே கிடைக்கும்.
வீட்டுப் பணியாளர்கள் அப்ஷர் இயங்குதளத்தில் நுழைந்து,அலைபேசியில் வரும் OTP ஐச் சரிபார்த்த பின், “மின்னணு சேவைகள்”, பின்னர் “தொழிலாளர்கள்” என்பதைக் கிளிக் செய்து,”மக்காவிற்கு நுழைவு அனுமதி” என்பதைத் தேர்ந்தெடுத்து அனுமதி விண்ணப்பத்தை உருவாக்கவும்.
அனுமதி பெறும் பயணாளியின் இகாமா செல்லுபடியாகும், விண்ணப்பதாரர் சவூதி அரேபியாவிற்குள் இருக்க வேண்டும்.
நிறுவனங்களுக்கான நடைமுறைகளை சவூதி அரேபியாவில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான பொது இயக்குநரகம் (ஜவாசாத்) முகீம் போர்டல் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. சவூதி லேபர் சந்தையில் 5 ஆண்டுகளில் 1.19 மில்லியன் வீட்டுப் பணியாளர்கள் சேர்ந்துள்ளனர்.
https://makkahpermit.muqeem.sa/#/logi இணைப்பில் உள் நுழைந்து அனுமதி விண்ணப்பங்கள்,அனுமதிகளைச் சேர்த்தல், தகவலைச் சேர்த்தல்,அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேவையான இணைப்புகளைச் சேர்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.