கடந்த திங்கள் கிழமை முதல் நுழைவு அனுமதி பெறாத குடியிருப்பாளர்கள் புனித தலைநகருக்குச் செல்லும் சாலைகளில் உள்ள பாதுகாப்புக் கட்டுப்பாட்டுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கல் எனப் பொதுப் பாதுகாப்பு பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தலைநகருக்குள் நுழைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
புனிதத் தலங்களில் பணிபுரிபவர்கள் , அதிகாரத்தால் வழங்கப்பட்ட நுழைவு அனுமதிப் பெற்றவர்கள், தலைநகரில் வழங்கப்பட்ட குடியுரிமை அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் தவிர, மற்ற அனைவரையும் திருப்பி அனுப்புகிறது.
வீட்டுப் பணியாளர்கள், சவூதி அல்லாத குடும்ப உறுப்பினர்கள், புனித தலைநகரில் உள்ள நிறுவனங்களில் வசிக்கும் தொழிலாளர்கள், பருவகால வேலை விசா வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு மின்னணு முறையில் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்களைப் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் பெறத் தொடங்கியுள்ளது.
“அப்ஷர் தனிநபர்கள்” தளம் வீட்டுப் பணியாளர்கள் , சவூதி அல்லாத குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதிகளை வழங்குவதால், பயனாளிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்கி, நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.