போலந்தில் இருந்து கோழி இறைச்சி, முட்டை மற்றும் அவற்றின் தயாரிப்புகள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) நீக்கியுள்ளது.
விலங்கு பராமரிப்புக்கான உலக அமைப்பு வெளியிட்ட உடனடி அறிவிப்பு அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாகவும், கொடிய பறவைக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவுன் SFDA கூறியுள்ளது.
SFDA சமீபத்தில் அர்ஜென்டினாவில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்ய தற்காலிக தடையை அறிவித்துள்ளது, பிரான்சில் இருந்து அவற்றின் இறக்குமதியை மீண்டும் தொடங்கியுள்ளது.