அல்-பாதா துறைமுகத்தில் உள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) எல்லைக் கடவு வழியாகச் சவூதிக்கு வரும் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 183,900 கேப்டகன் வகை போதை மாத்திரைகளைக் கடத்தும் முயற்சியை முறியடித்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர், சவூதிக்குள் பொருட்களைப் பெற்றவர் கைது செய்யப்பட்டனர்.
சவூதியின் அனைத்து சுங்கப் புள்ளிகளிலும் அதன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான சுங்கக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி, இத்தகைய குற்றங்களில் இருந்து சமுதாயத்தைப் பாதுகாக்கும் கடத்தல் முயற்சிகளைக் கண்டிப்பாகக் கையாளும் என்று ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
1910@zatca.gov.sa என்ற மின்னஞ்சல், சர்வதேச தொலைபேசி எண் 00966114208417, கடத்தல் மற்றும் ஒருங்கிணைந்த சுங்க அமைப்பின் விதிகளின் மீறல்கள் தொடர்பான அறிக்கைகளை ஆணஐயம் பெறும் சேனல்கள், பாதுகாப்பு அறிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட எண் 1910 தொடர்பு கொள்வதன் மூலம், சமூகம் மற்றும் தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாக்க, கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து குடிமக்களுக்கும் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இது போன்ற அறிக்கைகளைக் கடுமையான ரகசியத்தன்மையுடன் கையாள்வதாகவும், தகவல் சரியானது எனத் தெரியவந்தால் புகாரளிக்கும் நபருக்கு நிதி வெகுமதி அளிக்கும் என்றும் சம்பந்தப்பட்ட ஆணையம் கூறியுள்ளது.