Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் போதைப்பொருள் குறித்த அனைத்து அறிக்கைகளும் ரகசியமாக கையாளப்படுகிறது.

போதைப்பொருள் குறித்த அனைத்து அறிக்கைகளும் ரகசியமாக கையாளப்படுகிறது.

182
0

போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேசிய குழுவின் (NCNC) இயக்குனர் போதைப்பொருள் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் இரகசியமாகக் கையாளப்படுவதாக டாக்டர் சுலைமான் முகமது அல்-லுஹைதான் உறுதிப்படுத்தியுள்ளார்.

போதைப்பொருள் ஆலோசனைக்கான தேசிய மையம்மூலம், சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்குவதாக ஒகாஸ்/சவூதி கெசட்டிடம் டாக்டர் அல்-லுஹைடன் கூறியுள்ளார். போதைப் பொருட்கள்பற்றி விசாரணைகளைக் கையாள்வதோடு, சிகிச்சை பெறுபவர்களின் குடும்பங்கள், சிகிச்சைக்காகக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கும் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

பாதுகாப்பு, தடுப்பு, ஊடகம், சிகிச்சை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை பரப்புவதுடன், போதைப்பொருள் மற்றும் மனநோய் சார்ந்தவைகள் சமூகத்தில் பரவுவதை எதிர்கொள்ளத் தேசிய குழு முயல்கிறது .

போதைப்பொருளை எதிர்த்து அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து, சமூகத்தின் மீதான அதன் ஆபத்துகள்பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதனை ஊக்குவிப்பவர்கள் மீது புகாரளித்து எதிர்கொள்ள வேண்டும்.நாடு முழுவதும் பல நகரங்களில் போதைப்பொருட்களை சந்தைப்படுத்துபவர் மற்றும் விற்பனை செய்த பலரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (GDNC) கைது செய்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!