4 மில்லியனுக்கும் அதிகமான மாத்திரைகளை விநியோகிக்கும் முயற்சியைச் சவுதி போதைப்பொருள் எதிர்ப்பு அதிகாரிகள் புதன்கிழமை முறியடித்துள்ளனர், மேலும் ஆறு விநியோகஸ்தர்களை ரியாத்தில் கைது செய்ததாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்தின் (ஜிடிஎன்சி) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆறு சந்தேக நபர்களில் மூன்று எகிப்திய நாட்டினர் , ஒரு சூடான் நாட்டவர், ஒரு யேமன் நாட்டவர் மற்றும் ஒரு சவுதி பிரஜை ஆகியோர்கள் அடங்குவர். அவர்கள் கைது செய்யப்பட்டு, பொது வழக்கு விசாரணைக்கு அனுப்புவதற்கான ஆரம்ப சட்ட நடைமுறைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்குப் பகுதிகளில் 911 என்ற எண்ணிலும், பிற பிராந்தியங்களில் உள்ள 999 என்ற எண்ணிலும் போதைப்பொருள் கடத்தல் அல்லது போதைப்பொருள் ஊக்குவிப்பு தொடர்பான தகவல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு பாதுகாப்பு முகமைகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளன.
மேலும் 995 மற்றும் 995@gdnc.gov.sa வாயிலாகவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்திற்கு தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் கையாளப்படும் என்றும் தெரிவித்தனர்.