கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைக் கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள மற்ற பாதுகாப்புத் துறைகள் மேற்கொண்ட முயற்சிகளை உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அசிஸ் பின் சவுத் பின் நயிஃப் பாராட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மொஹமத் அல் கர்னி மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதி அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புத் தளபதிகள் எனப் பலரையும் சந்தித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார், இச்சந்திப்பில் பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





