போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளை உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சவுத் பின் நயிஃப் பாராட்டியுள்ளார்.
அமைச்சகத்தின் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த அமைச்சர், பட்டத்து இளவரசரின் ஆதரவு, உத்தரவுகள் மற்றும் பிரச்சாரம் உறுதியான முடிவுகளை அடைந்துள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரச்சாரம் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிராக தேடுதல் வேட்டைகள் தொடர்வதாகவும், இளைஞர்களைக் குறிவைப்பது அல்லது நாட்டின் பாதுகாப்பை சேதப்படுத்தவும் அமைச்சகம் இடமளிக்காது என்றும் கூறியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் குறித்த புகார்களை அல்லது தகவல்களைக் குடிமக்கள் அனுப்புவதன் மூலம் அதனை எதிர்த்துப் போராடும் குடிமக்களின் விழிப்புணர்வையும் அமைச்சர் பாராட்டியுள்ளார் ,மேலும் தகவல்கள் ரகசியமாகக் கையாளப்படும் என்றும் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.