போதைப்பொருள் எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டு ஒரு பிரச்சாரத்தை சவூதி தொடங்கியுள்ளது, போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்து ,இளைய தலைமுறையினரை குறிவைக்கும் இதற்கு நிதியளிப்பதற்கான ஆதாரங்களை நீக்கியுள்ளது.
நாடு முழுவதும் பல நகரங்களில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை சந்தைப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதை கண்டுபிடித்து பலரை கைது செய்ததாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (GDNC)
அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 1 வெளிநாட்டவர் உட்பட இரண்டு பேர், ஜெட்டாவில், போதைப் பொருளை பரப்புவதில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதை மாத்திரைகளை ஊக்குவித்ததற்காக ரியாத் நகரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜசான், கிழக்கு மாகாணம், ஆசிர் அல்-காசிம் ஆகிய இடங்களில் ஹாஷிஷ் புழக்கத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கைது செய்யப்பட்டவர் சமூக ஊடக தளங்கள் மூலம் ஹஷிஷ்களை பரப்பி வந்துள்ளார். கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 மில்லியனுக்கும் அதிகமான ஆம்பெடமைன் மாத்திரைகள் கடத்தப்பட்டதை GDNC பறிமுதல் செய்துள்ளது.
அனைத்து வகையான போதைப் பொருட்களுக்கும் எதிரான பிரச்சாரங்களிலும் சமூகப் பொறுப்புணர்வை முன்னிலைப்படுத்தியுள்ளது. “அவற்றைப் புகாரளிக்கவும்” என்ற தலைப்பில் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏதேனும் சந்தேகத்திற்கிடமாக இருந்தால், சமூகத்தின் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்குமாறு அது வலியுறுத்தியுள்ளது. போதைப்பொருளுக்கு எதிரான சமூக ஊடகப் பிரச்சாரத்தை இயக்குனரகம் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.