சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் சவூதி பொறியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய சோதனையில், சமூக வலைதளங்களில் பொறியாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து பொறியியல் தொழில்முறை பயிற்சி சட்டத்தை மீறியதற்காக ஒருவரை சவூதி பொறியாளர்கள் கூட்டமைப்பு (SCE) கைது செய்துள்ளது.
கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் சமூக ஊடகங்களில் பொறியியலாளர் என ஆள்மாறாட்டம் செய்து பொறியியல் தொழில் பயிற்சிச் சட்டத்தின் 11 வது விதியை மீறியதற்காகச் சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டவரைக் கைது செய்ததில் SCE வெற்றி பெற்றுள்ளதாகச் சவூதி பொறியாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பொறியாளர் அப்துல் நாசர் அல்-அப்துல்லா கூறியுள்ளார்.
பொறியியல் நடைமுறைச் சட்ட விதிமீறல்களை மீறுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடித்தபின், வழக்கு அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டது. சட்டத்தை மீறுபவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 100,000 ரியால் வரை அபராதமும் விதிக்கப்படும் என நீதித்துறை தீர்ப்பளித்துள்ளது.
அல்-அப்துல்லாஹ், பொறியியல் துறையைச் சட்டவிரோதமான நடைமுறைகளில் இருந்து பாதுகாக்க, பொறியியல் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பொறியியல் தொழில்களின் நடைமுறைச் சட்டத்தைக் கடைப்பிடிக்கு வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் https://apps.saudieng.sa/forms/2016/Officecomplains.aspx என்ற இணைப்பின் மூலமாகவோ அல்லது Tawakalna Services செயலி மூலமாகவோ சட்ட மீறல்களைப் புகாரளிக்க அனைவருக்கும் அல் அப்துல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.