Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து காணொளி வாயிலாக ஆய்வு நடத்திய CEDA.

பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து காணொளி வாயிலாக ஆய்வு நடத்திய CEDA.

287
0

பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் கவுன்சில் (CEDA) சமீபத்தில் உள்ளூர் மற்றும் உலக அளவில் பொருளாதார முன்னேற்றங்களை ஆய்வு செய்ய ஒரு காணொளி மாநாட்டினை நடத்தியுள்ளது.

இந்த விளக்கக்காட்சியின் போது, ​​எண்ணெய் அல்லாத செயல்பாடுகளின் விரிவாக்கத்தை கவுன்சில் பாராட்டி, எண்ணெய் அல்லாத தனியார் துறையில் கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டின் (PMI) வளர்ச்சி விகிதங்களைச் சுட்டிக்காட்டியது.

மெட்டல்வொர்க்ஸ், ஆட்டோமொபைல் தொழில், கணினி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், சுற்றுலா, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், தகவல் தொடர்பு, மற்றும் சேவைத் துறைகளில் உள்ள தொழில்துறையின் வளர்ச்சிக்கு நன்மைகளை வழங்கும் முன்னுரிமை பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பிடும் தேசிய மையம் சமர்ப்பித்த காலாண்டு விளக்கக்காட்சியையும், தனியார்மயமாக்கலுக்கான தேசிய மையம் சமர்ப்பித்த விளக்கக்காட்சியையும் கவுன்சில் மதிப்பாய்வு செய்தது.

2023 இரண்டாம் காலண்டில் அடைந்த முன்னேற்றம் குறிப்பாக “துடிப்பான சமூகம், செழிப்பான பொருளாதாரம் மற்றும் லட்சிய தேசம்” என்ற மூன்று முக்கிய குறிக்கோள்கள் தொடர்பான் முன்னேற்றங்களை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கவுன்சில் அத்தியாவசிய முடிவுகளை எடுத்துப் பரிந்துரைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!