பொருளாதார பன்முகத்தன்மையில் சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆச்சரியமளிக்கிறது என துபாயில் நடைபெற்ற அரபு நிதி மன்றத்தில் அல்-அரேபியா பிசினஸுக்கு அளித்த பேட்டியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார்.
சவூதி அரேபியாவில் சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் நம்பிக்கையளிப்பதாகவும், அவை நன்றாக விரிவடைந்து வருவதாகவும் கூறிய அவர், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தின் சுறுசுறுப்பு மற்றும் பெண்களின் பங்கு ஆகியவை நாட்டிற்கு சுற்றுலாவை ஈர்ப்பதாகக் கூறினார்.
தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு சவூதியின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதாக IMF தலைவர் குறிப்பிட்டார். ஹைட்ரோகார்பன் அல்லாத துறையில் சவூதி அரேபியாவின் வளர்ச்சியை எடுத்துரைத்த அவர், மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதில் சவூதி அரேபியா கவனம் செலுத்துவதை எடுத்துரைத்தார்.
ஏஜென்சியின் புதிய ரியாத் அலுவலகத்தைச் சுட்டிக்காட்டி அரபு மண்டலம் முழுவதும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதை IMF நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு வளர்ச்சி எதிர்பார்ப்புகளைத் தாண்டியிருந்தாலும், இந்த ஆண்டுக்கான கணிப்புகள் 3.1 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், முழுமையான பொருளாதார மீட்சி மிக விரைவில் அறிவிக்கப்படும் என ஜார்ஜீவா ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





