சவூதி அரேபியாவின் பொது வழக்கு மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களுக்கிடையில் மின்னணு ஒருங்கிணைப்பு செயல்முறை படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் விஷன் 2030 இன் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இரு தரப்பினரும் செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதையும், கூட்டு சட்ட கட்டமைப்பு மற்றும் பணி அமைப்பை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியின் அவற்றின் செயல்திறனை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
பொது வழக்கு மற்றும் வர்த்தக அமைச்சகம் சவூதி அரேபியாவின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சிக்குப் பங்களிக்கும் விதத்தில் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அத்துடன் பொருளாதார பாதுகாப்பை அடைவது மற்றும் பணமோசடி, வணிக மோசடி போன்ற குற்றங்களை எதிர்த்துப் போராடடுதல் இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் மின்னணு ஒருங்கிணைமை செயல்படுத்தியதின் மூலம் வணிக அமைச்சகத்திலிருந்து வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.