குறைந்த பட்ஜெட்டில் வாழ நினைப்பவர்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது கார் வாங்க வசதி இல்லல்லாதோரும் சவூதி அரேபியாவின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான (SAPTCO) சாப்ட்கோ வால் இயக்கப்படும் பொது பேருந்துகளில் தலைநகர் ரியாத்தை சுற்றி பயணிக்கலாம், நினைத்த இடங்களுக்குச் செல்லலாம் என்றும் இது எளிய மக்களுக்கு மிக வசதியாக இருக்கும் என்றும், இந்தப் பேருந்தைப் பயன்படுத்த, SAPTCO ஸ்மார்ட் கார்டுடன் தேவையான அளவு பண இருப்பு இருந்தால் போதுமானது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
SAPTCO என்பது ரியாத்தில் பேருந்து நெட்வொர்க்கின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடும் நிறுவனமாகும். மக்காஹ், மதீனா, ஜெத்தாஹ் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களில் இது முக்கிய பொது போக்குவரத்து சேவைகளைச் செய்வதுடன் சவூதி முழுவதும் உள்ள சிறு நகரங்களையும் இணைக்கும் அரசால் நிர்வாகிக்கப்படும் ஓர் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.
ரியாத் நகரத்தில் உள்ளூரில் பயணிக்க இந்த SAPTCO பேருந்துகள் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.