நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ,குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மக்கா பகுதி மிதமான முதல் கனமழையால் பாதிக்கப்படும் என்றும், மேலும் தைஃப், மைசன், ஆதம், அல்-குர்மா, அல்-அர்தியத், துர்பா, ரனியா, அல்-மாவியா, அசிர், அல்-பஹா, ஜசான் மற்றும் நஜ்ரான் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும் என இயக்குனரகம் கூறியுள்ளது.
மிதமான மழை , மணல் புயல்கள் ரியாத் , திரியா, அல்-மஜ்மா, அல்-சுல்பி, அல்-காட், ரமா, தாடிக், ஷக்ரா, அஃபிஃப், அல்-தவாத்மி, அல்-குவையா, அல்-முஸாஹிமியா, துர்மா, ஹுரைமிலா, அல்-அஃப்லாஜ், வாடி அல்-தவாசிர், அல்-சுலைல், அல்-கர்ஜ், ஹோதாத் பானி தமீம், அல்-ஹரிக், அல்-பஜாடியா மற்றும் அல்-தலாம் பகுதிகளைத் தாக்கும் என எச்சரித்துள்ளது.
மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், சதுப்பு நிலங்கள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட நீரோடைகள் கூடும் இடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தண்ணீர் குளங்களில் நீந்த வேண்டாம் என எச்சரித்துள்ளது. பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்த வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை இயக்குனரகம் கூறியுள்ளது.