கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு ஹஜ்ஜின்போது வெளிநாட்டு யாத்ரீகர்களின் பெரும் வருகையால் உள்ளூர் பணப் பரிமாற்றங்களின் வணிக நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் மிகப்பெரிய எழுச்சிப் பெற்றன. ஹஜ் பருவத்தில் டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளின் பரிவர்த்தனைகள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன.
பல பணப் பரிமாற்றங்களின் உரிமையாளர்களின் கூற்றுப்படி, உலகம் முழுவதிலுமிருந்து வந்த யாத்ரீகர்களிடையே பரிமாற்ற பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலர் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்படும் நாணயமாகும். பணப் பரிமாற்றத்தின் உரிமையாளரான சலாஹுதின் சலேஹ் கூறும்போது, இந்த ஹஜ் பருவமானது, நாட்டில் நாணய மாற்று வணிகங்களின் வலிமைக்கு குறிப்பிடத் தக்க பங்களிப்பை அளிக்கிறது என்று கூறினார். தற்போதைய ஹஜ் பருவத்தில் நாணய மாற்று சந்தையின் ஆண்டு அளவு SR25 பில்லியன் ஆகும், மேலும் இது பணப் பரிமாற்றிகளுக்குப் பெரும் லாபத்தை அளிக்கிறது. பரிவர்த்தனை நிறுவனங்கள் சுமார் 50 சர்வதேச நாணயங்களைக் கையாள்வதால் ஆண்டு வருவாய் சுமார் SR450 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத்தின் அளவு முந்தைய மூன்று ஆண்டுகளைவிட மிகவும் சிறப்பாக இருந்தது என்று அவர் கூறினார். “தொற்றுநோய் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகளை நீக்கியதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் காரணமாகப் பணப் பரிமாற்றங்களின் பரிவர்த்தனைகள் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளன,” என்றும் அவர் கூறினார்.