சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் யாத்திரை அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகம், அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து, ஹஜ் யாத்ரீகர்களுக்கான தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த முயற்சி இப்போது மொராக்கோ, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும், முதன்முறையாகத் துருக்கி மற்றும் ஐவரி கோஸ்டிலும் செயல்படுத்தப்படுகிறது.
189 விமானங்களில், பயனாளிகள் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் இந்தத் திட்டமானது ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் நாடுகளில் உள்ள பயண நடைமுறைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் மின்னணு முறையில் விசா வழங்குவதும் மற்றும் புறப்படும் நாட்டின் விமான நிலையத்தில் சுகாதாரத் தேவைகளைச் சரிபார்த்து பாஸ்போர்ட் நடைமுறைகளை நிறைவு செய்வதுமாக இருக்கிறது.