சவூதி அரேபியாவில் கோடைகாலம் மெல்ல மெல்ல உச்சத்தை அடைந்து வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் வரை சற்றே குளிராக இருந்த வானிலை மார்ச் மாதத்தில் கோடை காலத்தை ஆரம்பித்து ஏப்ரம் மாத இறுதியில் உச்சத்தை அடைந்துள்ளது.
புனித மக்காஹ் நகரில் கடந்த 181 நாட்களில் நேற்று மிக அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவு ஆகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மக்காவைத் தொடர்ந்து AIAhsa, AIQaysumah, Dammam பகுதிகளிலும் வெப்ப நிலை அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் தபூக், தாயுஃப் போன்ற பகுதிகளில் அடிக்கடை மழைப்பொழிவும், குளிரான வெப்பநிலையும் நிலவி வருவதும் குறிப்பிடத் தக்கது.
வெப்பநிலை உச்சம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் கருப்பு நிற ஆடைகளை அணியாமல் வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அடிக்கடி நீர், மோர், பழச்சாறுகள் குடிப்பதால் உடலை களைப்படையாமல் செய்யலாம் என்றும் சவுதி தமிழ் மீடியா தன் நேயர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது.