ஜூன் 11ஆம் தேதி முதல் புனிதத் தலங்களுக்குள் அனுமதியற்ற வாகனங்கள் நுழைவதற்கு சவுதி பொதுப் பாதுகாப்புத் துறை தடை விதித்து மேலும் ஜூன் 13 ஆம் தேதி வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும் என்றும், ஹஜ் அனுமதியின்றி பயணிகளைக் கொண்டு செல்வது ஆறு மாத சிறை மற்றும் 50000 ரியால் அபராதம் போன்ற தண்டனைகளுக்கு வழிவகுக்கும் எனப் பொதுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மக்காவிற்கு நுழையும் இடங்களில் உள்ள பருவகாலக் குழுக்கள், களக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து மாற்றப்படும் பயணிகளைச் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லும் வழக்குகளைக் கையாளும். அனுமதியின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்குப் போக்குவரத்து வசதியை வழங்கினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்.
ஹஜ் அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைபவர்களுக்கு சவூதி ரியால் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், ஹஜ் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் பிடிபட்ட சவுதி குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட மீறுபவர்களுக்கு 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.