2023-24 கல்வியாண்டுக்கான எல்.கே.ஜி & மேற்பட்ட வகுப்புகளுக்கான புதிய சேர்க்கைகள்குறித்து தம்மாமில் உள்ள பன்னாட்டு இந்தியப் பள்ளி சுற்றறிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல்வேறு வகுப்புகளில் சேருவதற்கான இணையதளப் பதிவுக்கான. விவரங்களை www.iisdammam.edu.sa. என்ற பன்னாட்டுப் பள்ளியின் இணையதளத்தில் காணலாம்.
பெற்றோர்கள் தங்கள் இருப்பிடத்தின் தேவையான அனைத்து விவரங்களையும் இணையதள பதிவு படிவத்தில் பூர்த்தி செய்து அதை இணையதள வழியே சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தேவையான குறிப்பு எண் வழங்கப்படும். எதிர்கால குறிப்புகள் மற்றும் பயன்பாட்டிற்காக இந்த எண்ணைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தின் அச்சு எடுக்கப்பட்டு, சேர்க்கையின்போது மற்ற அனைத்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான தேதி (தேவைப்பட்டால்) மற்றும் சேர்க்கை தேதி ஆகியவை குறுஞ்செய்தி/ மின்னஞ்சல்மூலம் தெரிவிக்கப்படும். பதிவு / சேர்க்கை விதிமுறைகளைப் பூர்த்தி செய்யப் பெற்றோர்கள் ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மாணவ/மாணவிகளின் பிரிவிற்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் இந்த இணையதள பதிவுச் சேர்க்கைக்கு உத்தரவாதம் அளிக்காது.
மூன்றாம் வகுப்புவரை, வயது மற்றும் நுழைவுத் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
நான்காம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் சேர்க்கை பெறுவதற்கு சிபிஎஸ்இ ஆல் இணைக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் மற்றும் தேர்ச்சிச் சான்றிதழ் /ஒழுங்கு சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம்.
11 ஆம் வகுப்புச் சேர்க்கைக்கு, இந்தியப் பன்னாட்டு பள்ளி தம்மாம் அல்லாத மாணவர்களுக்கான தற்காலிக சேர்க்கை, தகுதி மற்றும் தற்போதைய இருக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புச் சேர்க்கைக்கு, குறைந்தபட்ச ஆவணங்கள் தேவை மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற, ஆண்கள் பிரிவில் உள்ள தலைமை அலுவலரை அணுகுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.