உலகம் முழுவதும் பசி பரவி, ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியன் இறப்புகளுக்கு புகையிலை காரணமாக உள்ளது. புகையிலை பயிர்களுக்கான மானியம் வழங்குவதை நிறுத்தி, உணவு வளர்க்க விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
124 நாடுகளில், 3.2 மில்லியன் ஹெக்டேர் வளமான நிலங்கள் புகையிலையை வளர்க்க பயன்படுத்தப்படுவதாக WHO வருத்தம் தெரிவித்தது. புகையிலை பண்ணைகளை ஆதரிக்க மில்லியன் கணக்கானவற்றை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செலவிடுகின்றன, அதற்குப் பதிலாக உணவைப் பயிரிடுவதைத் தேர்ந்தெத்து, உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்துச் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்குமாறு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
349 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், கடந்த சில ஆண்டுகளில் புகையிலை சாகுபடி 15 சதவீதம் அதிகரித்துள்ளது.WHO அறிக்கை படி, 10 பெரிய புகையிலை பயிரிடுபவர்களில் 9 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்.
காடழிப்பு, நீர் ஆதாரங்கள் மாசுபடுதல் , மண் சீரழிவுக்கு புகையிலை பயிரிடுதல் காரணமாக இருப்பதால், சுற்றுச்சூழலும் சமூகங்களும் பாதிக்கப்படுகின்றது.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய WHO இன் சுகாதார மேம்பாட்டுக்கான இயக்குனர் டாக்டர் ருடிகர் கிரெச், புகையிலையின் முக்கியத்துவம் “நாம் அவசரமாக அகற்ற வேண்டிய கட்டுக்கதை” என்று எச்சரித்துள்ளார்.
சுமார் 1.3 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்வதற்குப் பதில் புகையிலைப் பண்ணைகளில் வேலை செய்வதாகக் கூறியுள்ளார்.
கென்யா மற்றும் ஜாம்பியா போன்ற நாட்டின் விவசாயிகளுக்குப் புகையிலைக்குப் பதிலாக நிலையான உணவுப் பயிர்களை வளர்க்க WHO, UN’s Food and Agriculture Organisation (FAO) மற்றும் World Food Program (WFP) ஆகியவை இணைந்து உதவுகிற்து.
புகையிலை சாகுபடியில் இருந்து விவசாயிகள் விடுபடுவதற்கு ஐ.நா அமைப்பின் “கருத்துக்கான ஆதாரம்” திட்டத்திற்கு ,ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள் ஆதரவு அளித்துள்ளது. “உலகில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் அவர்கள் விரும்பினால் புகையிலை விவசாயத்தில் இருந்து வெளியேற உதவலாம்,” எனக் கூறியுள்ளார்.