பிலிப்பைன்ஸிலிருந்து ஆட்சேர்ப்புச் செலவுகளின் வரம்பை ரியால் 17,288 இருந்து ரியால் 15,900 மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) ஆகக் குறைத்துள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) ஏதும் இந்தப் புதிய செலவில் இல்லை என்று MHRSD கூறியுள்ளது. ஆட்சேர்ப்பு சந்தையில் விலை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, துறையை மேம்படுத்துவதில் அமைச்சகத்தின் பணி தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
ஆட்சேர்ப்பு சந்தை நடத்தப்பட்டு அதில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தையும், செயல்படும் விதத்தையும், MHRSD தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
எத்தியோப்பியா வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரம்பு ரியால் 6,900 ; சியரா லியோன் ரியால் 7,500;புருண்டி ரியால் 7,500; உகாண்டா ரியால் 9,500; தாய்லாந்து ரியால் 10,000 ;கென்யா ரியால் 10,870;பங்களாதேஷ் ரியால் 13,000 ;இலங்கை ரியால் 15,000 ஆகும்.
செலவுகள், வழங்கப்பட்ட சேவைகள் ,மற்றும் ஒழுங்குமுறைகளை பொருளாதார மாறிகளுக்கு ஏற்ப, பின்பற்றுவதில் அமைச்சகம் ஆர்வமாக உள்ளது.
அறிவிக்கப்பட்ட செலவுகளின் உச்ச வரம்பை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அனைத்து டீலர்களுக்கும் தெரிவித்துள்ளது. இது Musaned தளம் மூலம் நடைமுறைகளைப் பின்பற்றும்.