சவூதி அரேபியாவின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் (நசாஹா) நடத்திய சோதனையில், சந்தேகத்தின் பேரில் 369 ஊழல்வாதிகளை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் உள்துறை, பாதுகாப்பு, நீதி, சுகாதாரம், கல்வி, நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள், வீட்டுவசதி, ஜகாத், வரிவிதிப்பு மற்றும் சுங்கம் ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகளும் அடங்குவர்.
விசாரணைக்குப் பிறகு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் 176 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று நசாஹா தெளிவுபடுத்தியது.
மேலும், பொதுமக்கள் 980 கட்டணமில்லா எண் அல்லது மின்னஞ்சல் இணைப்பு (info@nazaha.gov.sa) அல்லது 114420057 என்ற தொலைநகல் எண் மூலம் தாங்கள் பார்க்கும் சந்தேகத்திற்கிடமான நிதி அல்லது நிர்வாக ஊழலைப் பொதுமக்கள் புகாரளிக்குமாறு நசாஹா கேட்டுக் கொண்டுள்ளது.