சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் (MEWA) ரியாத் நகராட்சி, தேசிய பனை மற்றும் பேரிச்சம்பழ மையத்துடன் (NCPD) இணைந்து பருவகால பேரீட்சை கண்காட்சியின் இரண்டாவது பதிப்பைத் துவக்கியது 60 நாட்கள் நீடிக்கும் கண்காட்சியில் பல விவசாய சங்கங்கள் பங்கேற்கின்றன.
சவூதி அரேபியாவின் மொத்த விவசாய உற்பத்தியில் SR7.5 பில்லியன் அல்லது 12% பங்களிக்கும் பனைத் தோட்டத் துறையை இந்தக் கண்காட்சி ஆதரித்து விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், அவர்களின் விவசாயத் தொழிலை இலவசமாக மேம்படுத்தவும், அவர்களின் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பதன் மூலம் அவர்களின் நிதி லாபத்தைப் பெறவும் உதவுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ரவாபி சந்தையில் (ரியாத் பருவகால பேரீட்சை சந்தை) மாலை 4:00 மணி முதல் திறக்கப்பட்டு இரவு 11:00 மணிவரை 2 மாதங்கள் நீடிக்கும் இக்கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
அமைச்சகம் ஆண்டுதோறும் இது போன்ற கண்காட்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவது தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு பேரீட்சை பழத்தின் ஏற்றுமதியை பலப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு எனவும், பேரீட்சை தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் கண்காட்சிமூலம் பயனடைந்துள்ளன எனவும் ரியாத்தில் உள்ள MEWA கிளையின் செயல் இயக்குனர் ஃபஹத் அல்-ஹம்சி கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் 33 மில்லியனுக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன, மேலும் பனை விவசாய நிலங்களின் எண்ணிக்கை 123,000 ஐ எட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
2021 ஆம் ஆண்டிற்கான பேரீட்சை ஏற்றுமதியில் 12.15 பில்லியன் சவூதி ரியால் மதிப்பின் அடிப்படையில் சவூதி அரேபியா உலகில் முதலிடத்தில் உள்ளது, குறிப்பாக ரியாத் பகுதி 400,000 டன்களுக்கும் அதிகமான பேரீச்சம்பழங்களை உற்பத்தி செய்வது சவூதியின் மொத்த உற்பத்தியில் 24% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.