சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை மதிப்பைக் கணக்கில் எடுக்காமல், அதன் லாப வரம்பில் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) கணக்கிட முடியும் என ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம், அறிவித்துள்ளது. இந்த விதிமுறை ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும்.
மொத்த விற்பனைத் தொகைக்கும் வரி விதிக்கப்படலாம் என்பதால், லாப வரம்பில் மதிப்பு கூட்டப்பட்ட வரியைக் கணக்கிடும் முறை கட்டாயமில்லையென அதிகாரம் வலியுறுத்தியுள்ளது.
கார் அதிகாரத்தால் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட காராக இருக்க வேண்டும், மேலும் அந்தக் கார் நாட்டிற்குள் இருக்க வேண்டும் . கார்களில் லாப வரம்பு முறையைப் பயன்படுத்த உரிமம் பெற்ற டீலர், தகுதியுடையவராகக் கருதப்படுவதற்கு அதிகாரத்தின் ஒப்புதலைப்பை பெற வேண்டும்.
மொத்த கார் விற்பனை மதிப்பில் VAT வசூலிக்கப்படுவதற்குப் பதில், லாப வரம்பு அடிப்படையில் கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தின் மீது VAT விதிக்கப்படும்.
இது குறித்த சந்தேகங்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டர் எண் 19993 அல்லது “Ask Zakat, Tax and Customs” என்ற ட்விட்டர் பக்கம் ,(@Zatca_Care) அல்லது மின்னஞ்சல் வழியாக (info@zatca.gov.sa), அல்லது (zatca.gov.sa) என்ற இணையதளம் வழியாக உடனடி தகவல் பெறலாமென அமைச்சகம் தெரிவித்துள்ளது.