தங்கள் உடைமை பைகளின் எடை பயணச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள அல்லது அனுமதிக்கப் பட்டுள்ள பேக்கேஜ் அளவுடன் பொருந்துகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்தி விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு இ-போர்டிங் பாஸ் அதாவது ஆன் லைனில் செக்கிங் செய்வது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
மேலும் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் அல்லது ஐ.டி அடையாள அட்டை கட்டாயம் வைத்திருப்க்கள். மேலும் டொமஸ்டிக் விமானம் என்றால் இரண்டு மணி நேரம் முன்பும், சர்வதேச விமானங்களுக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்திற்கு சென்று சேரவும். இது போக்குவரத்து நெரிசல் காலத்தில் உங்களுக்குக் கைக்கொடுக்கும்.
மேலும் அனுமதிக்கப்படாத சாமான்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும் அதாவது விமான நிறுவனம் எதை எடுத்துச் செல்லக் கூடாது என்று எச்சரித்துள்ளதோ அந்தப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது.
பயண நடைமுறைகளை எளிதாக்க
கயிறுகளால் கட்டப்பட்ட பைகள், துணியால் மூடப்பட்ட பைகள், வட்டமான மற்றும் ஒழுங்கற்ற வடிவ சாமான்கள்,
துணி சாமான்கள், நீண்ட பட்டைகள் கொண்ட சாமான்கள் போன்றவற்றை தவிர்த்து… அனுமதிக்கப் பட்ட அளவுகளில் ஆன பெட்டிகளில் பொருட்களை எடுத்துச் செல்வதும், ஒரு பெட்டி எக்காரணத்தை முன்னிட்டும் 23 கிலோவுக்கு அதிகமாக இல்லாமலும் இருப்பதும் நல்லது.