தேசிய விமான நிறுவனங்கள் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயணிகளுக்கு 8 மில்லியன் சவூதி ரியால் இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், இழப்பீட்டில் தாமதம், சேத சாமான்கள் இழப்பு, விமான ரத்து, விமான தாமதங்கள் ஆகியவை அடங்கும் என்றும் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் (GACA) அறிவித்துள்ளது.
ஏர் கேரியர் ஒப்பந்தத்தின்படி பயணிகளுடன் ஒப்புக்கொண்டதை விமான கேரியர்கள் கடைப்பிடிக்காததன் விளைவாகப் பாதிக்கப்பட்ட பயணிகளின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில் GACA தனது முயற்சியைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
GACA இன் துணைத் தலைவர் இன்ஜி. அப்துல்அஜிஸ் அல்தாஹ்மாஷ், அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்பப் புகார்களைச் சமர்ப்பித்தல், மற்றும் புகார்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதற்கு அதிகாரம் உறுதிபூண்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புதிய ஒழுங்குமுறை பயணிகள் தங்கள் பொருட்களை இழந்தால் தகுந்த நிதி இழப்பீடு பெறலாம். சாமான்களில் சேதம் அல்லது தாமதம் ஏற்பட்டால், பயணிகள் தகுந்த நிதி இழப்பீடு பெற உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவை செய்யும் போது அறிவிக்கப்படாத நிறுத்தப் இடங்களைச் சேர்த்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவாதம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.