சவூதி அரேபியாவிற்கு சுமார் 3 கிலோ எடையுள்ள கோகோயினை குடலில் மறைத்து வைத்து, கடத்த முயன்ற மூவரை ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையத்தின் அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
வழக்கமாக நடைபெற்ற சோதனையின்போது, சந்தேகத்திற்குரிய மூன்று பயணிகளை அதிகாரிகள் எக்ஸ்ரே ஸ்கேன் செய்தபோது குடலுக்குள் மறைத்து வைத்திருந்த கோகோயினை கண்டறிந்ததாக ஆணையம் கூறியுள்ளது.
ஹெராயின் மற்றும் கொக்கெய்ன் போன்ற போதைப்பொருட்களை கொண்டு வருவதற்கு கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய முறைகளில் இது ஒன்றாகும். இருந்த போதிலும் நாடு சமூகத்தைப் பாதுகாக்க இத்தகைய கடத்தல்களை முறியடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.