2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பின், ஹஜ் பருவத்திற்காக வரும் வாரங்களில் உலகின் அனைத்து பகுதியிலிருந்தும் சுமார் ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பயணிகள் சவூதி அரேபியாவிற்கு வருகிறார்கள்.
துல் காய்தா 1, மே 22 ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு பயணிகளைக் கொண்ட முதல் தொகுதிகள் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை வந்தடைந்தது. இவர்கள் மலேசியா மற்றும் பங்களாதேஷிலிருந்து ‘மக்கா பாதை’ முன்முயற்சியில் வந்தவர்கள்.
‘மக்கா ரூட்’ திட்டத்தின் கீழ் பங்களாதேஷில் இருந்து ஜெட்டாவில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு ஹஜ் பயணிகள் வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் பயணிகள் ‘மக்கா ரூட்’ முயற்சியின் கீழ் திங்கள்கிழமை அதாவது மே 22 அன்று மதீனா வந்தடைந்தனர்.
தற்போது பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, மொராக்கோ, பங்களாதேஷ், துருக்கி மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கிய மக்கா வழி முயற்சியைச் சவூதி உள்துறை அமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளது.
விஷன் 2030 இன் ஒரு பகுதியான இது, 2019 இல் தொடங்கப்பட்டது. மின்னணு விசா வழங்குதல், பயோமெட்ரிக் குணாதிசயங்கள் சேகரிப்பு, பாஸ்போர்ட் நடைமுறைகளை நிறைவு செய்தல், ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஆண்டு ஹஜ் சீசன் 1444 க்கான ஊடக அடையாளத்தை, 15 கணக்குகள் மூலம் “மக்களுக்கு ஹஜ்ஜைப் பிரகடனப்படுத்துங்கள்” என்ற முழக்கத்தின் கீழ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் ஊடகம், ஹஜ் சம்பிரதாயங்கள் குறித்து பயணிகளுக்குக் கல்வி கற்பித்தல் , சேவைகள், நடைமுறைகள் , சரியான நடத்தைகள் பற்றி 14 சர்வதேச மொழிகளில் அறிமுகப்படுத்துகிறது.
ஹஜ் செய்ய எந்த வயது வரம்புகளும் நிர்ணயம் செய்யாமல், பெண்களுக்கு எந்த குறிப்பிட்ட தேவைகளும் இல்லாமல், சிறப்பு வசதிகளை வழங்குதல் ,நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்கு சிறப்புத் தேவைகள் கொண்ட சேவைகள் வழங்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.