வேலை அனுமதி அல்லது அஜீர் திட்டத்தின் அறிவிப்பு இல்லாமல் ஒரு வெளிநாட்டு பணியாளர் பணியமர்த்தப்பட்டால் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) படி, 5,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும்.
அரச ஆணைகள் மற்றும் தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்கள் படி தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைச்சர்களின் முடிவுகளுக்கு இணங்க, ஜமாதுல்-அவ்வல் 5, 1443, தீர்மானம் எண். 92768 மூலம் வழங்கப்பட்ட மீறல்கள் மற்றும் அபராதங்களின் அட்டவணையைத் திருத்தியபின்னர் இறுதி வரைவு வடிவமைக்கப்பட்டது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, தொழில் பாதுகாப்பு விதிகளுக்கு முதலாளி இணங்காதது மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது கடுமையான குற்றமாகும். இதற்கு 1500 முதல் 5000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.
50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு குழந்தை பராமரிப்பு அல்லது நர்சரிக்கு நியமிக்கப்பட்ட இடம் இல்லாதது கடுமையான மீறல் என்றும், மீறுபவருக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெளிவுப்படுத்தியது.
15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது கடுமையான மீறலாகும், மேலும் விதிமீறல்களுக்கு 1,000 ரியால்கள் முதல் 2,000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். வேலை அனுமதி பெறாமலோ அல்லது அஜீர் திட்டத்தை அறிவிக்காமலோ சவூதி அல்லாத தொழிலாளி, வேலைக்கு அமர்த்தப்பட்டால் 10000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடையே ஊதியம் அல்லது வேலைவாய்ப்பில் ஏதேனும் பாகுபாடு காணப்பட்டால் 3,000 ரியால் அபராதம் விதிக்கப்படும். தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பாஸ்போர்ட் அல்லது இகாமா வைத்திருந்தால், முதலாளிக்கு ரியால் 1000 அபராதம் விதிக்கப்படும். குறிப்பிட்ட தேதிகளில் தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயத்தில் செலுத்தத் தவறினால், ரியால் 300 அபராதம் விதிக்கப்படும்.
பணியிடத்தில் தவறான நடத்தை தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கத் தவறியது அல்லது புகாரைப் பெற்ற ஐந்து நாட்களுக்குள் குற்றவாளிகள்மீது ஒழுக்காற்று நடவடிக்கையைப் பரிந்துரைக்க அல்லது தவறு செய்யும் தொழிலாளிக்கு ஒழுங்குமுறை அபராதம் விதிக்கத் தவறினால் 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
மீறுபவர்கள் நோட்டீஸ் வழங்கிய 60 நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்தத் தவறினால், தொழிலாளர் சட்டத்தின்படி அபராதம் செலுத்தும் வரை அமைச்சகத்தால் வழங்கப்படும் சேவைகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.