மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள கிவா தளம், பணி அனுமதிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கிரெடிட் மற்றும் மதா டெபிட் கார்டுகளின் புதிய சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. முன்பு பணி அனுமதிக் கட்டணம் SADAD கட்டண முறை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
கிவா தளமானது நடப்பு நிதியாண்டிற்கான பணி அனுமதி கட்டணத் தரவை வழங்குகிறது. மேலும் இது மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) இ-சேவைகள் போர்ட்டலில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதியில், 50 சதவீத தொழிலாளர் ஒப்பந்தங்களை ஆவணப்படுத்தாத சில நிறுவனங்களின் மின்னணு சேவைகளைத் தளம் நிறுத்தி வைத்துள்ளது. நிறுத்தப்பட்ட சேவைகளில் உடனடி விசாக்கள், சேவைகளை மாற்றுதல், தொழில் மாற்றத்திற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் 80 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களின் ஒப்பந்தங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒப்பந்தங்களை ஆவணப்படுத்தக் கணக்கில் உள்நுழைந்து, நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, மொபைலுக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்ட பின் புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.பின் ஒப்பந்தங்களை ஆவணப்படுத்தி ஒப்பந்தத்தைப் பதிவேற்ற வேண்டும்.
அமைச்சகம் பல சேவைகளைக் கிவா தளத்திற்கு மாற்றத் தொடங்கியுள்ளது. தற்போது, அஜீர் திட்டத்தின் சேவைகள் கிவா தளம் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.