1 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி குற்றச்சாட்டில் ஏழு பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 6 சவுதி அரேபியர்கள் அடங்குவர். சிலருக்கு அதிகபட்சமாக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதித்ததுடன், பணமோசடி குற்றத்தில் பயன்படுத்திய கருவிகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. விசாரணைக்குப் பிறகு, வழக்கு அரசு வழக்கறிஞர் அலுவலக பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
குற்றவாளிகள் தங்கள் நிறுவனங்களுக்கு வணிகப் பதிவுகளைத் தொடங்குவதும், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் திறப்பதும், கணக்குகளை அரபு நாட்டவர்களிடம் ஒப்படைப்பதும், வைப்புச் செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆதாரங்களைச் சரிபார்த்ததில், பல விதிமுறைகளை மீறிப் பணம் வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.





