நிதி மோசடி குற்றத்திற்காக 11 பாகிஸ்தானியர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனைக்குப் பிறகு குற்றவாளிகளை நாடு கடத்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 11 பாகிஸ்தானியர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையைப் பொது வழக்கின் நிதி மோசடி பிரிவு முடித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியும், அலைபேசியில் தொடர்பு கொண்டும், வங்கி விவரங்களைப் புதுப்பிக்க வற்புறுத்தி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று, வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து, பணத்தைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.
அனைத்து வகையான குற்றங்களில் இருந்தும் நிதி பாதுகாப்பது தொடரும் என்றும் நிதி மோசடியில் ஈடுபடும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.