பணமோசடி குற்றச்சாட்டில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 23 பேருக்குச் சவூதி நீதிமன்றம் பல்வேறு சிறைத்தண்டனைகளை விதித்துள்ளதாகப் பொது வழக்கறிஞரின் அதிகாரப்பூர்வ ஆணையம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசிட் விசாவில் சவூதிக்கு வந்து,4 மில்லியனுக்கும் அதிகமான ரொக்க பணத்தை தங்களுடன் ஒரு சரக்கு வண்டியில் கொண்டு செல்ல முயன்றபோது அதிகாரிகளிடமிருந்து மறைக்கும் முயற்சியில் பணத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். கைப்பற்றப்பட்ட தொகையானது குற்றச் செயல்கள் மற்றும் பல விதிமுறைகளை மீறியதன் மூலம் சம்பாதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை விசாரித்த நீதிமன்றம், அனைவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும், மீதமுள்ளவர்களுக்கு 4 முதல் 8 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், பல்வேறு நிதி அபராதங்களும் விதிக்கப்பட்டது.
அந்த நபர்களிடம் சிக்கிய பணத்தை பறிமுதல் செய்யவும், அந்தந்த சிறை தண்டனையை அனுபவித்த பிறகு அவர்கள் அனைவரையும் சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.