சவூதி தலைநகரின் நான்கு மெகா திட்டங்களில் ஒன்றான பசுமை ரியாத் திட்டம், அல்-உரைஜாவில் நகர் புறங்களில் காடு வளர்ப்பு வேலைகளுடன் வியாழன் அன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதன் கட்டமைப்பிற்குள் நகரின் குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மரம் நடும் திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குர்துபா, அல்-காதிர் மற்றும் அல்-நகீல்ம் ஆகிய பகுதிகளில் இத்திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது, இதன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப்புறத்தில் காடு வளர்ப்புத் திட்டம் பற்றிய விவரங்கள் அல்-உரைஜாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில்
விளக்கப்பட்டது.தங்கள் சுற்றுப்புறத்தை மாற்றியமைக்கும் என்பதை இந்த நிகழ்வு குடியிருப்பாளர்களுக்குக் காட்டியுள்ளது.
அல்-உரைஜாவில் 30 தோட்டங்கள், 19 பள்ளிகள், 46 மசூதிகள் மற்றும் 70 வாகன நிறுத்துமிடங்களில் 110,000 மரங்களை நடப்பட்டுள்ளது.இது 120க்கும் மேற்பட்ட பகுதிகளில் காடு வளர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.