நைஜரின் வடமேற்கே டபடோல் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குச் சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி செவ்வாய்க் கிழமை டபடோலில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 29 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நைஜர் அரசு மற்றும் மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
மேலும் நைஜருடன் சவூதி அரேபியாவின் ஒற்றுமை மற்றும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றின் நோக்கங்களைப் பொருட்படுத்தாமல் அது முற்றிலும் நிராகரிப்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.