ஹஜ் மற்றும் உம்ராவுக்கான இரண்டு புனித மசூதிகளின் பாதுகாலர்களின் விருந்தினர்கள் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான கடைசி ஹஜ் குழு வியாழக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்தது.
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் உள்ள 90 நாடுகளிலிருந்து 1,300 ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்கு வந்துள்ளனர்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் அவர்களின் உத்தரவின் பேரில் யாத்ரீகர்களுக்கு விருந்தளிக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மக்காவில் உள்ள அவர்களது வசிப்பிடங்களுக்கு வந்தடைந்த யாத்ரீகர்களுக்கு மலர்கள், ஜம்ஜம் தண்ணீர், பேரீச்சம்பழம் மற்றும் சவூதி அரேபியாவின் பாரம்பரிய காஃபி ஆகியவை வழங்கி விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், யாத்ரீகர்கள் தவாஃப் அல்-குதூம் (வருகையின் தவாஃப்) செய்யப் பெரிய மசூதிக்குச் சென்றடைந்தனர். மேலும் இந்த ஹஜ் குழு மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசருக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதற்கான அக்கறை மற்றும் ஆர்வத்திற்காகத் தங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.