சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கவும் சுற்றுச்சூழல் இணக்கத்திற்கான தேசிய மையம் (NCEC) புதிய தளத்தின் தொடக்கத்தை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு சுற்றுச்சூழல் அறிக்கைகளைத் தளத்தின் மூலம் சமர்ப்பித்து, இயற்கை வளங்களின் பயன்பாடு உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகள்பற்றிய விரிவான தகவல்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
புதிய தளமானது நிறுவனங்கள் துல்லியமாகவும், விரிவாகவும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக உரிமம் மற்றும் இணக்க செயல்பாடுகளின் செயல் இயக்குநர் அஹ்மத் ஹப் அல்-ரிஹ் கூறினார்.
இந்தப் புதிய தளம் NCEC மற்றும் நிறுவனங்களுக்கிடையே தொடர்பை மேம்படுத்துவதோடு, தரவுகளைத் திறம்பட சேகரித்து பகுப்பாய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுவனங்களின் செயல்திறனைப் பின்தொடர்ந்து மதிப்பீடு செய்ய உதவும்.
சவூதி அரேபியாவில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அணுகலை மேம்படுத்துவதில் இந்தப் புதிய தளம் ஒரு முக்கிய பங்காகக் கருதப்படுகிறது.