Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க வீழ்ச்சியை பாராட்டியுள்ள பொருளாதார கூட்டமைப்பு.

நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க வீழ்ச்சியை பாராட்டியுள்ள பொருளாதார கூட்டமைப்பு.

177
0

பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான கவுன்சில் (CEDA) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பணவீக்க விகிதங்கள் 2.7% குறைந்துள்ளது எனப் பாராட்டியுள்ளது.

2023 நிதியாண்டுக்கான மாநிலத்தின் பொது பட்ஜெட்டின் செயல்திறன் குறித்து நிதியமைச்சகம் சமர்ப்பித்த காலாண்டு அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எண்ணெய் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சிக்குத் தொலைநோக்கு திட்டங்கள் 13% பங்களித்துள்ளதாகச் சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சி முடிவில் பல அறிக்கைகள், விளக்கங்கள் மற்றும் தலைப்புகளை மதிப்பாய்வு செய்து, பொருளாதார அமைச்சகத்தின் காலாண்டு பொருளாதார மற்றும் மேம்பாட்டு அறிக்கை, உள்ளூர் மற்றும் உலகளாவிய பொருளாதார செயல்திறன் பற்றிய திட்டமிடல் ஆகியவையும் இதில் அடங்கும். மேலும் கடந்த காலங்களில் பல துறைகள் மற்றும் செயல்பாடுகளில் கண்ட வளர்ச்சி, தேசிய பொருளாதாரத்தின் மிக முக்கியமான குறிகாட்டிகளின் பகுப்பாய்வும் இதில் அடங்கும்.

இந்த விளக்கக்காட்சியில் கடந்த கால உலகப் பொருளாதார நிலை மற்றும் அதன் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டமும் உள்ளது. கவுன்சில் பல தீர்மானங்களையும் பரிந்துரைகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!