நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 2023க்கான உயர்நிலை அரசியல் மன்றத்தில் (HLPF), ரியாத்தில் வேர்ல்ட் எக்ஸ்போ 2030 ஐ நடத்த உள்ள, ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் (RCRC) பங்கேற்றது.
“கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) மீட்பை துரிதப்படுத்துதல், அனைத்து நிலையிலும் நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலை முழுமையாகச் செயல்படுத்துதல்” என்ற தலைப்பில் மன்றங்கள் நடத்தப்பட்டது. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ரியாத்தின் எக்ஸ்போ 2030 பங்களிப்பை
ரியாத் எக்ஸ்போ 2030 இயக்குநர் ஜெனரல் இன்ஜி. அப்துல் அஜீஸ் பின் அப்துல் மொஹ்சென் அல்-கன்னம், எடுத்துரைத்தார்.
மன்றத்தின் முடிவுகள் அனைத்து சர்வதே கண்காட்சிகளையும் மேற்பார்வையிடும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அமைப்பான பீரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் (BIE), உறுப்பினர்களுடன் மதிப்பாய்வு செய்யப்படும்.
இந்த ஆண்டு மன்றத்தை நியூயார்க்கில் உள்ள ஐ.நாத்தலைமையகத்தில் ஜூலை 10 மற்றும் 19, 2023ல் மாநிலங்களின் முன்முயற்சிகள், அறிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) ஒருங்கிணைத்துள்ளது.