சவூதி அரேபியாவின் மக்கள்தொகை 32 மில்லியனாக உள்ள நாட்டின் 2022க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் முடிவுகளைப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) புதன்கிழமை அறிவித்தது.
மொத்த எண்ணிக்கையில், சவூதியர்கள் 18.8 மில்லியனும் (58.4%), சவுதி அல்லாதவர்கள் 13.4 மில்லியனும் (41.6%) ஆவர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சவூதி அரேபியா இளம் வயது மக்கள்தொகையினரை அதிகம் கொண்டுள்ளது, அதாவது மொத்த மக்கள் தொகையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் மட்டும் 63% ஆவர்.
மேலும் நாட்டின் மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 19.7 மில்லியனை எட்டியுள்ளது, அதே சமயம் பெண்களின் எண்ணிக்கை 12.5 மில்லியனை எட்டியுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 39 சதவீதத்தை குறிக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் ரியாத் மிகப்பெரிய சவுதி நகரமாகும், அதைத் தொடர்ந்து ஜித்தா, மக்கா, மதீனா மற்றும் தம்மாம் ஆகிய நகரங்கள் உள்ளன.
குடும்ப அமைப்பைப் பொறுத்தவரை, மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள், ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 4.8 நபர்களைக் கொண்ட சவூதி குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 4.2 மில்லியன் எனக் கொண்டுள்ளது. சவூதி அல்லாத குடும்ப உறுப்பினர்களின் சராசரி அளவு ஒரு குடும்பத்திற்கு 2.7 உறுப்பினர்களாக உள்ளது மற்றும் ஆண்களின் விகிதம் நாட்டில் உள்ள மொத்த சவூதி அல்லாதவர்களில் 76 சதவீதத்தை எட்டியுள்ளது.
சவூதி அரேபியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2022 முடிவுகள், மக்கள் தொகை, குடும்பங்கள் மற்றும் வீடுகள் ஆகிய மூன்று முக்கிய வகைகளில் விரிவான தரவுகளை உள்ளடக்கியது.மேலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், இடம்பெயர்வு மற்றும் பன்முகத்தன்மை குறித்த முடிவுகள் அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படும்.
பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் மற்றும் புள்ளிவிபரங்களுக்கான பொது ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பைசல் அல்-இப்ராஹிம் கூறுகையில், “2022க்கான சவுதி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு முக்கியமான தேசிய திட்டமாகும், மேலும் அதன் வெளியீடுகள் திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய தூணாக இருக்கும். மேலும் அவர் கூறுகையில் சமூகக் கொள்கை, பல்வேறு துறைகள் மற்றும் சேவைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நாட்டின் முதலீட்டு சூழலை ஆதரித்தல் மற்றும் விஷன் 2030 இலக்குகளை அடைவதற்கும் இந்தப் புள்ளி விவரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.