நிலையான எதிர்காலத்தை நோக்கிய சவுதி அரேபியாவின் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கும் வகையில், “நிலைத்தன்மை கோட்பாடுகள் மற்றும் நடைமுறை” என்ற ஐந்து நாட்கள் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
கிங் அப்துல்லா பெட்ரோலியம் ஆய்வுகக்கான ஆராய்ச்சி மையம் (KAPSARC) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கிங் அப்துல்லா பல்கலைக்கழகம் (KAUST) இணைந்து சவூதியின் ஒன்பது அமைச்சகங்கள் மற்றும் அதன் நிறுவனங்களைச் சேர்ந்த 40 வல்லுநர்களுக்கு இன்றைய அழுத்தமான நிலைத்தன்மை சவால்களைச் சமாளிக்கத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பாடுகள் மற்றும் விஷன் 2030ன் குறிக்கோள்களைச் செயற்படுத்துவது சம்பந்தமாக இந்த ஐந்து நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆழ்ந்த கற்றல் அனுபவத்தின் மூலம், இந்தத் தனித்துவமான திட்டம், நாட்டின் முன்னேற்ற நிலைத்தன்மையில் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈடுபாடு மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள்மூலம், நாடு எதிர்கொள்ளும் நிஜ-உலக சவால்களுக்கு அதிநவீன நிலைத்தன்மைக் கோட்பாடுகளைப் பயன்படுத்த இந்தத் திட்டம் வல்லுநர்களுக்கு உதவுகிறது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, அனுபவமிக்க உருவகப்படுத்துதல்கள், பங்கேற்பாளர்களுக்கு நாடு அளவிலான முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் நிலைத்தன்மை சிக்கல்களின் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றிய நுண்ணறிவுக்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது
மேலும் ஆக்கபூர்வ முடிவுகளை எடுக்கவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது
“KAPSARC மற்றும் KAUST இடையேயான அடிப்படை ஒத்துழைப்பு மூலம் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார அம்சங்களுக்கிடையேயான தொடர்புகளை ஆராயும் ஒரு இடைநிலை நிலைத்தன்மை பாடத்தை முன்னோடியாக மாற்ற இது உதவும்.
“சவுதி அரேபியா மற்றும் உலகம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் காலநிலை மாற்றம் ஒன்றாகும்” என்று KAPSARC இன் காலநிலை மற்றும் நிலைத்தன்மை திட்டத்தின் இயக்குனர் முகமது ஹெஜாசி கூறினார். “இந்தப் பாடத்திட்டத்தின் மூலம், எங்கள் பங்கேற்பாளர்களுக்குக் காலநிலை மீள்தன்மையை இயக்குவதற்கும் அவர்களின் நிறுவனங்கள் மற்றும் துறைகளில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வளப்படுத்துவற்கு இது உதவும் என்று கூறினார்.