தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் (MIM) சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல சுரங்கத் தளங்களில் ஜூலை மாதத்தில் 2,013 ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, சுரங்க முதலீட்டுச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்களில் 49 வகை அபராதங்கள் உரிம நிபந்தனைகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காகவும், உரிமத்தின் வரம்புகளுக்கு வெளியே பணிபுரிந்ததற்காக 26 அபராதங்களும், காலாவதியான உரிமத்துடன் பணிபுரிந்ததால் 24 அபராதங்களும் மற்றும் உரிமம் பெறாமல் பணிபுரிந்ததற்காக 2 அபராதங்களும் விதிக்கப்பட்டது.
மக்கா பகுதியில் உள்ள நிறுவனங்கள் 29 அபராதங்களுடன் அதிக எண்ணிக்கையிலான மீறல்களும், அதைத் தொடர்ந்து மதீனாவில் 19,அல்-ஜூஃப் 11,ரியாத்தில் 9,அசிர் மற்றும் அல்-ஷர்கியாவில் 7, அல்-காசிமில் 6, வடக்கு எல்லைகளில்5, ஜிசான் பகுதியில் 4,ஹைல் பகுதி 2 மற்றும் நஜ்ரான் பகுதி 1 என அபராதங்களை பதிவு செய்துள்ளதாக MIM இன் செய்தித் தொடர்பாளர் ஜர்ரா அல்-ஜர்ராஹ் கூறினார்.
கனிம வளங்களை உகந்த பயன்பாட்டிற்காகப் பாதுகாக்கவும், சுரங்கப் பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும், சுரங்க முதலீட்டுச் சட்டத்தின் விதிமுறைகளைப் பயன்படுத்துவதோடு, துறையின் நிலைத்தன்மையை அடையவும் இது உதவுகிறது என்று அல்-ஜர்ராஹ் மேலும் கூறினார்.
சவூதி அரேபியாவில் உள்ள கனிம வைப்புகளின் மதிப்பு சுமார் 5 டிரில்லியன் சவூதி ரியால் என மதிப்பிடப்பட்டுள்ளதால், தேசிய வருமான ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துவதற்கும், எண்ணெய் அல்லாத வருவாயை வளர்ப்பதற்கும் பங்களிப்பதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.