தைவான் தலைநகர் தைபேயில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் (TISF 2024) சவூதி மாணவர்கள் 9 முக்கிய மற்றும் சிறப்பு விருதுகளைப் பெற்று,27 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தனர்.
சவூதி மாணவர்கள் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், மருத்துவம் மற்றும் வாழ்க்கை, வேதியியல், பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளில் இரண்டு முதல் நான்காவது இடங்களை அடைந்ததன் மூலம் 7 முக்கிய விருதுகளும்,கணினி அறிவியல்,இயற்பியல் மற்றும் வானியல் துறைகளில் 2 சிறப்பு சாதனை விருதுகளும் வென்றனர்.
சவூதியின் பல்வேறு பகுதிகளின் கல்வித்துறைகளை சேர்ந்த பல மாணவர்கள் போட்டியிட்டு வென்றனர், மேலும் இந்த சிறப்பு விருதுகள் குறிப்பிட்ட அளவுகோல்கள் மற்றும் தரநிலைகளின்படி பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
TISF 2024 ஆண்டுதோறும் தைவான் தேசிய அறிவியல் கல்வி மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு தைவானின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தைபேயில் நடத்தப்படுகிறது,நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே பல்வேறு அறிவியல் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் பங்கேற்கும் நாடுகளின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.





